.webp)
பேராயர் பிரபல்யமடைவதற்காக தவறான கருத்துக்களை சமூகமயப்படுத்துவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மங்கள சமரவீரவின் இந்தக் கருத்து தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பின்வருமாறு கருத்துக் கூறினார்.The need for #HumanRights was an outcome of the marauding religious zealots of the Inquisition & the Crusades,where non believers were massacred "En-Bloc".Pity, the Cardinal always seems to get things wrong in trying to be a populist. https://t.co/nGueNGQ6nq #lka
— Mangala Samaraweera (@MangalaLK) September 24, 2018
உண்மையிலேயே இது அரசாங்கத்தின் நிலைப்பாடா என்பதை நாம் அறிய வேண்டும். ஏனெனில், அவர் தற்போதைய அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே வெளியிட்டுள்ளார். அவர் நிதி அமைச்சராகவும் ஊடகங்களுக்கு பொறுப்பாகவும் இருக்கின்றார். அமைச்சர் என்ற வகையில் அவர் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைக் கூறினாரா என்பதை நாம் அறிய வேண்டும். தற்போது ஜனாதிபதி நாட்டில் இல்லை. பிரதமர் விளக்கமளிக்க வேண்டும். அவர் இதுவரை அவ்வாறு செய்யவில்லை. இதனைத் தவறான முன்னுதாரணமாகவே நாம் காண்கின்றோம்.