செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 26-09-2018 | 5:53 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. திலீபனின் நினைவு தின அனுஷ்டிப்பு தொடர்பாக பொலிஸார் தாக்கல் செய்த தடையுத்தரவு விண்ணப்பம் யாழ். நீதிமன்றத்தால் நேற்று (25) நிராகரிக்கப்பட்டது. 02. பலாலி விமான நிலைய அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்தவொரு வௌிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 03. அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைகின்றமை இன்று பாரதூரமான நிலையை அடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 04. மத்திய மாகாண பதில் முதலமைச்சராக மருதபாண்டி ராமேஸ்வரன் நேற்று (25) பதவிப் பிரமாணம் செய்துள்ளார். 05. இலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 480 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளது. 06. இடமாற்றம் பெற்றும் புதிய பணியிடங்களுக்கு செல்லாத வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் சம்பளத்தை இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. ஆட்கடத்தல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா மேலும் பலப்படுத்தியுள்ளது. 02. சிரிய படையினரால் ரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு ஒரு வார காலத்தில், சிரியாவிற்கு ரஷ்யா புதிய ஏவுகணைகளை வழங்குகிறது. 03. போர்த்துக்கல் கடற்கரைப் பகுதியில், 400 ஆண்டுகள் பழைமையான, கப்பலின் உடைந்த பாகங்கள் தொல்பொருள் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை கிரிக்கெட் தலைமைப் பயிற்றுநர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவருக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கையின்படி, தாம் அணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அஞ்சலோ மெத்யூஸ் அறிவித்துள்ளார். 02. சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின், ஆண்டின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற விருதை குரோஷிய அணியின் நட்சத்திர வீரரான லூகா மொட்ரிச் சுவீகரித்தார்.