ஷில்பா அபிமானி கண்காட்சி மூலம் 10 மில்லியன் ரூபா வருமானம்

ஷில்பா அபிமானி கண்காட்சி மூலம் 10 மில்லியன் ரூபா வருமானம்

ஷில்பா அபிமானி கண்காட்சி மூலம் 10 மில்லியன் ரூபா வருமானம்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2018 | 5:03 pm

Colombo (News 1st) ஷில்பா அபிமானி – 2018 கண்காட்சியின் மூலம் 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் பெறப்பட்டுள்ளது.

கைப்பணிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியிலேயே இவ்வாறு வருமானம் பெறப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த கண்காட்சியை 27,000 பேர் பார்வையிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் இருந்து கைப்பணிப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்