கூகுள் தேடல் முடிவுகளில் மாற்றம்

கூகுள் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் விதத்தில் மாற்றம்

by Bella Dalima 25-09-2018 | 4:25 PM
உலகின் பிரபல தேடு பொறி நிறுவனமான கூகுள் 20 வயதை எட்டியுள்ள நிலையில், இனி தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும் என தகவல் வௌியாகியுள்ளது. உலகின் பிரபல தேடு பொறி நிறுவனமான கூகுள் 04.09.1998 அன்று லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இரு நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இணைய உலகின் மிகவும் பிரபலமான தேடுபொறி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இனி கூகுளின் தேடல் முடிவுகள் காண்பிக்கப்படும் விதத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன. முன்பு போலவே இனியும் கூகுளின் தேடல் முடிவுகள் தொடர்ந்து வெளிவரும். அனால், அவை காண்பிக்கப்படும் முறையில் மாற்றம் வரவுள்ளது. சமூக வலைத்தள நிறுவனங்கள் போல இனி தேடல் முடிவுகளில் News Feed, செங்குத்து வடிவ வீடியோக்கள், புகைப்படங்களுடன் இணைந்த தகவல்கள் மற்றும் நிறைய கதைச் செய்திகள் ஆகியன காண்பிக்கப்படும். அத்துடன், தனிப்பட்ட பயனாளர்களின் தேடுதல் விபரங்களின் தொகுப்பு மற்றும் விருப்பத் தேர்வுகள் ஆகியவற்றைப் பொறுத்து டிஸ்கவர் என்னும் பிரத்தியேக Feed இணைக்கப்படவுள்ளது.