நுவரெலியா பொது வைத்தியசாலையில் பயன்படுத்திய தடுப்பூசியில் பிரச்சினைகளும் இல்லை – சுகாதார அமைச்சு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் பயன்படுத்திய தடுப்பூசியில் பிரச்சினைகளும் இல்லை – சுகாதார அமைச்சு

நுவரெலியா பொது வைத்தியசாலையில் பயன்படுத்திய தடுப்பூசியில் பிரச்சினைகளும் இல்லை – சுகாதார அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2018 | 7:21 am

Colombo (News 1st) நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 17 நோயாளர்களுக்கு பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், டாக்டர் அனில் ஜாசிங்கவுக்கு வழங்கிய ஆலோசனைக்கிணங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன .

இவ்வாறான பிரச்சினை நுவரெலியா வைத்தியசாலையில் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக அந்த விடயம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ள ​நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், குறித்த தடுப்பூசி தேசிய மருந்து தர சோதனைக்கூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்