ENTERPRISES ஶ்ரீலங்காவில் 22,957 பேருக்கு கடன்

ENTERPRISES ஶ்ரீலங்கா திட்டத்தில் இதுவரை 22,957 பேருக்கு கடன்

by Staff Writer 24-09-2018 | 5:21 PM

என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா திட்டத்தினால் முன்னெடுக்கப்படும்  வட்டி சலுகையுடனான அரச கடன் திட்டத்தின் கீழ் இதுவரை 22,957 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச மற்றும் தனியார் வங்கிககளினூடாக முன்னெடுக்கப்படும் இந்தக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனின் மொத்த பெறுமதி 49,176 மில்லியன் ரூபாவாகும். என்டர்பிரைசஸ் ஶ்ரீலங்கா, அரச வட்டி சலுகையுடனான கடன் திட்டத்தின் கீழ் வட்ட நிவாரணம் மற்றும் 16 கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கடனின் முழுமையான வட்டி அல்லது வட்டியின் ஒரு பகுதியை கடன் பெறுநர் சார்பில் அரசாங்கம் செலுத்தவுள்ளமை சிறப்பம்சமாகும். அதற்கமைய, கடனுக்கான 13.5 வீத வட்டியில் 6.75 வீதத்தை அரசாங்கம் குறித்த வங்கிகளுக்கு செலுத்தவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. வரிச்சலுகை கடன்திட்டத்திற்காக 2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தினூடாக 5,300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கடன் திட்டத்திற்காக 3 மாதங்களுக்கு ஒரு தடவை அனைத்து வங்கிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் அதன் முன்னேற்றம் தொடர்பில் கலந்துரையாடப்படுவதாகவும் நிதியமைச்சர் மங்கல சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.