ஹற்றன் வீடொன்றில் தீ

ஹற்றன் வீடொன்றில் தீ

by Staff Writer 24-09-2018 | 3:38 PM

ஹற்றன் - கொட்டகலை வெலிங்டன் தோட்டத்திலுள்ள வீடொன்று தீக்கிரையாகியுள்ளது.

இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் எவரும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். மின்ஒழுக்கினால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹற்றன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.