ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 24-09-2018 | 6:11 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஜனாதிபதியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரது என கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. 02. எதிர்வரும் குளிர்காலத்தில் ஶ்ரீலங்கன் விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. 03. நியாயமான சம்பள உயர்வை வலியுறுத்தி நேற்று (23), தலவாக்கலை நகரில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தினர். 04. எதிர்வரும் வாரங்களில் அரசியலமைப்புச் சபையில் புதிய உறுப்பினர்களை நியமிக்கவுள்ளதாக பாராளுமன்ற பிரதிப் பொது செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார். 05. களனி – பொல்லேகல பகுதியில் தந்தையொருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கி மகனைக் கொலை செய்துள்ளார். வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவிக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பில் விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 02. மாலைதீவில் சர்ச்சை்குரிய ஜனாதிபதித் தேர்தல் நேற்று நடாத்தப்பட்டது. இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வௌியிடப்படும் என அந்நாட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.