சாரதிகளுக்கு எச்சரிக்கை

சாரதிகளுக்கு எச்சரிக்கை - வீதி அபிவிருத்தி அதிகார சபை

by Staff Writer 24-09-2018 | 3:30 PM

நாட்டில் அடிக்கடி நிலவும் மழையுடனான வானிலை காரணமாக அதிவேக வீதியைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

வாகனங்களை செலுத்தும்போது முன் விளக்குகளை ஔிரவிடுவதுடன், இருக்கைப் பட்டிகளை அணிந்து பயணிக்குமாறு அதிகாரசபை கோரியுள்ளது. மழை பெய்யும்போது அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்த வேண்டாமெனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. விடுமுறை காலங்களில் அதிவேக வீதிகளை பயன்படுத்தும் வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக வீதியின் பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓபநாயக்க தெரிவித்துள்ளார். சாதாரண நாட்களில் அதிவேக வீதியில் 50,000 வாகனங்கள் பயணிப்பதாகவும் விடுமுறை தினங்களில் குறித்த எண்ணிக்கை 70,000 வரை அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிணங்க, அதிவேக வீதியின் வருமானம் 25 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.