ஶ்ரீலங்கன் விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்

ஶ்ரீலங்கன் விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்

ஶ்ரீலங்கன் விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2018 | 10:32 am

Colombo (News 1st) எதிர்வரும் குளிர்காலத்தில் ஶ்ரீலங்கன் விமான சேவையின் நேர அட்டவணையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

இதனடிப்படையில், A 330 – 300 ரக விமானம் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் நாளாந்தம் மெல்பர்ன் நோக்கி பயணிக்கவுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாராந்தம் முன்னெடுக்கப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் விமான சேவைகளின் பயணங்களை 17 முதல் 21 வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் ஹொங்கொங்கிற்கான விமான சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன.

ஹொங்கொங்கிற்கு பயணிப்பதற்கு மற்றும் ஹொங்கொங்கிலிருந்து வருகை தருவதற்கு விமானச் சீட்டுகளை கொள்வனவு செய்துள்ள பயணிகள், ஏனைய விமான சேவைகள் மூலம் தமது பயணத்தை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்