ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விரைவில் ஆளுநரை சந்திக்கவுள்ளதாக திருமாவளவன் தெரிவிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விரைவில் ஆளுநரை சந்திக்கவுள்ளதாக திருமாவளவன் தெரிவிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விரைவில் ஆளுநரை சந்திக்கவுள்ளதாக திருமாவளவன் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2018 | 1:52 pm

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை அனுபவிக்கும் 7 பேரின் விடுதலை தொடர்பில் விரைவில் ஆளுநரை சந்திக்க உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குறித்த 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு பரிந்துரைத்துள்ள போதிலும், ஆளுநர் இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவில்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

7 பேரை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை செய்தும், ஆளுநருக்கு அதிகாரம் இருந்தும், நடவடிக்கை எடுக்க தயங்கிக்கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சுக்கு கடிதம் எழுதவில்லை என சொன்னவர் இன்னும் அதிகுறித்து அறிவிக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது. 7 பேரையும் விடுதலை செய்வதற்கு அரசியலமைப்பின் 161 என்று உறுப்புரை அதிகாரமளிக்கிறது. அதனைப் பயன்படுத்தி ஆளுநர் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என தொல். திருமாவளவன் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்