சம்பளம் வேண்டும் – தலவாக்கலை வீதியில் மக்கள்

சம்பளம் வேண்டும் – தலவாக்கலை வீதியில் மக்கள்

சம்பளம் வேண்டும் – தலவாக்கலை வீதியில் மக்கள்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2018 | 9:57 pm

நியாயமான சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று (23) தலவாக்கலை நகரில் ஆயிரக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர்.

தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்கு அருகில் இன்று முற்பகல் அதிகளவிலான தொழிலாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் ஒன்றுகூடினர்.

‘நியாயமான சம்பளத்தை கோரும் நீதிக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளில் அங்கிருந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிகளவிலான தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை சம்பளத்தை 1,000 வரை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் இதன்போது வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டப் பேரணி தலவாக்கலை ஊடாக நகர சபை மைதானம் வரை முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்