காட்டுவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் குறித்த தகவல்களைப் பெற நடவடிக்கை

காட்டுவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் குறித்த தகவல்களைப் பெற நடவடிக்கை

காட்டுவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் குறித்த தகவல்களைப் பெற நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2018 | 12:39 pm

Colombo (News 1st) காட்டு விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் குறித்த தகவல்களை விவசாயிகளிடமிந்து பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி விவசாயிகள், தமது பயிர் நிலங்களில் காட்டு விலங்குகளினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை எழுத்துமூலம் அறிவிக்க முடியுமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

011 287 2094 என்ற இலக்கத்திற்கு தொடர்புகொள்வதனூடாக சேத விபரங்களை அறிவிக்க முடியுமென விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

நாட்டில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையில் வருடமொன்றுக்கு 30 தொடக்கம் 35 வீதமான உற்பத்திகள், காட்டு விலங்குகளால் அழிவடைவதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்