அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்படும் நாலக டி சில்வா, நாமல் குமாரவின் தொலைபேசி உரையாடல்கள்

அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்படும் நாலக டி சில்வா, நாமல் குமாரவின் தொலைபேசி உரையாடல்கள்

அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்படும் நாலக டி சில்வா, நாமல் குமாரவின் தொலைபேசி உரையாடல்கள்

எழுத்தாளர் Staff Writer

23 Sep, 2018 | 11:06 am

Colombo (News 1st) ஜனாதிபதியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரது என கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள் அரச இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடலின் உள்ளடக்கங்கள், நேரம், பதிவாகியுள்ள குரல், மென்பொருள் ஊடாக ஏதேனும் திருத்தங்கள் ஏற்பட்டுள்ளதா என்பவை தொடர்பில் தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெற்றுக்கொள்ளப்படும் தகவல்களுக்கமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை பொலிஸ் அத்தியட்சகர், பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவின் அலுவலக அதிகாரிகள் சிலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா, தற்போது கட்டாய விடுமுறையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்