வௌ்ளிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

வௌ்ளிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 22-09-2018 | 6:35 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 7 அமைப்பாளர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர். 02. பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணவீர மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு சில நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 03. சைட்டம் (SAITM) தனியார் நிறுவனத்தில் மருத்துவப் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவியை மருத்துவ சபையில் பதிவு செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனடியாக அமுல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 04. தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியிலிருந்து எம்.எஸ். உதுமாலெப்பை விலகியுள்ளதாக தேசிய காங்கிரஸின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 05. வட மாகாண சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் வட மாகாண சபை உறுப்பினர்கள் 9 பேர் இந்தியாவிற்கு பயணித்துள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வௌிநாட்டுச் செய்திகள் 01. சீனாவின் கடன் தொல்லைக்குள் சிக்கியுள்ளதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட் தெரிவித்துள்ளார். 02. வியட்நாம் ஜனாதிபதியான ட்ரான் டாய் குவாங் (Tran Dai Quang) உடல்நலக்குறைவால் நேற்று காலை உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விளையாட்டுச் செய்தி 01. 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.