பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு தவறியுள்ளது

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அரசு தவறியுள்ளது - மஹிந்த ராஜபக்ஸ

by Staff Writer 22-09-2018 | 1:13 PM
Colombo (News 1st) ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தத் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தற்போதைய நிலையை விட நாடு சீர்குலையும். ஆகவே, இதற்கான தலைமைத்துவத்தை பயன்படுத்த வேண்டும். அந்த நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் எதனையும் மேற்கொள்ளாது, ஜனாதிபதியோ அல்லது பிரதமரே, அமைச்சரோ ரூபாவின் விலை அதிகரிக்கும் என கூறுவார்களாயின் நிச்சயமாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி பொதுமக்களே என ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேநேரம், நாளுக்கு நாள் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதால் ஒரு நாளுக்கு 34 பில்லியன் ரூபாவாக கடன் அதிகரிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இந்த நிலை தொடருமானால் அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.