ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி

ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி

by Staff Writer 22-09-2018 | 9:35 PM
Colombo (News 1st) அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இந்த விடயம் தொடர்பில் தற்போது அனைவரும் கவனம் செலுத்தியுள்ளனர். அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கடந்த ஐந்து நாட்களில் ரூபாவின் பெறுமதி சடுதியாக வீழ்ச்சியடைவதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த 17 ஆம் திகதி 164.37 சதமாக இருந்த அமெரிக்க டொலரின் விற்பனை விலை நேற்று 170.65 சதமாக பதிவானது. இந்த நிலையில், இறக்குமதி செய்யப்படுகின்ற வாகனங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதுடன், வாகனமொன்றின் விலை குறைந்த பட்சம் மூன்று இலட்சம் ரூபாவால் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 170.65 சதமாக நேற்று பதிவானது.