4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் முடக்கம்

சீனாவில் 4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்களும் ஒன்லைன் கணக்குகளும் முடக்கம்

by Bella Dalima 22-09-2018 | 5:01 PM
சீனாவில் 4000-இற்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்பின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணையத்தளங்களூடாக வதந்திகள் பரவுவதாலும் மத ரீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதைத் தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை முன்னெடுக்கப்பட்ட கண்காணிப்புகளின் போது, நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பரிமாறப்பட்ட கருத்துக்களை சீன அரசு முற்றாக அழித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அவ்வாறான சுமார் 1,47,000 கருத்துகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.