வியட்நாம் ஜனாதிபதி ட்ரான் டாய் குவாங் மரணம்

வியட்நாம் ஜனாதிபதி ட்ரான் டாய் குவாங் மரணம்

by Bella Dalima 21-09-2018 | 6:04 PM
வியட்நாம் ஜனாதிபதியான ட்ரான் டாய் குவாங் (Tran Dai Quang) உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜனாதிபதி ட்ரான் டாய் குவாங் வியட்நாமின் இராணுவ மருத்துவமனையில் தீவிர உடல்நலக் குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 வயதான ட்ரான் டாய் குவாங் 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 முதல் வியட்நாமின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ட்ரான் டாய் குவாங், சட்டப்படிப்பில் Phd பட்டம் பெற்றவர் ஆவார். இவர் 2006 முதல் 2011 வரை மக்கள் பாதுகாப்புத்துறையின் துணை அமைச்சராகவும் பின்னர் 2011 முதல் 2016 வரை அதே துறையில் அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார்.