உலகக் கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

உலகக் கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

by Staff Writer 21-09-2018 | 9:05 PM
Colombo (News 1st)  2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் வெற்றிக்கிண்ணம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வெற்றிக்கிண்ணத்தை உலகம் முழுதும் கொண்டு செல்லும் ஊர்வலத்தின் அங்கமாக இலங்கையிலும் காட்சிப்படுத்தப்படுகின்றது. 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. தொடரில் சாம்பியனாகும் அணிக்கு பரிசளிக்கப்படும் இந்த வெற்றிக்கிண்ணத்தை உலகம் முழுவதும் ஊர்வலமாகக் கொண்டு சொல்லும் பயணம் கடந்த மாதம் ஆரம்பமானது. வெற்றிக்கிண்ணம் மேற்கிந்தியத் தீவுகளில் காட்சிப்படுத்தப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக சாம்பியன் பட்டத்தை இலங்கைக்கு ஈட்டிக்கொடுத்த அர்ஜுன ரணதுங்க வெற்றிக் கிண்ணத்தை கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு ஏந்தி வந்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, இலங்கை டெஸ்ட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரங்கன ஹேரத் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.