by Staff Writer 20-09-2018 | 4:39 PM
Colombo (News 1st) அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்திய MTD Walkers நிறுவனத்தின் பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தை குறிப்பிட்டுள்ளது.
நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கல்களை இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பு பங்குச்சந்தையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இன்று பிற்பகல் 3.37 அளவில் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கடன் பத்திரமொன்று தொடர்பில் MTD Walkers நிறுவனத்திடம் விடயங்கள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்கு பதில் கிடைக்காமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் வங்கியில் பணிப்பாளர் பதவி வகித்துக்கொண்டு MTD Walkers நிறுவனத்திற்கு பில்லியன் கணக்கில் கடன் பெற்றுள்ளதாக அதன் நிறைவேற்று உப தலைவர் ஜெஹான் அமரதுங்க மீது அண்மையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.