மாகாண எல்லை நிர்ணயம் குறித்து கருத்துகள் பதிவு

மாகாண எல்லை நிர்ணயம் குறித்து கட்சித்தலைவர்களின் கருத்துகள் பதிவு

by Staff Writer 20-09-2018 | 11:02 AM
Colombo (News 1st) மாகாண எல்லை நிர்ணயம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்று (20) ஆரம்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் விசேட சந்திப்பின்போது, இந்த விடயம் முன்னெடுக்கப்படும் என எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் உறுப்பினர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க தெரிவித்தார். மாகாண எல்லை நிர்ணய மீளாய்வு குழு கடந்த 7ஆம் திகதி அலரி மாளிகையில் முதல் தடவையாக கூடியது. 2 மாதங்களுக்குள் எல்லை நிர்ணய அறிக்கையில் காணப்படும் சிக்கல்கள் குறித்து மீளாய்வு செய்யப்படவுள்ளதாகவும் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க மேலும் தெரிவித்தார். மாகாண எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து சபாநாயகர் கரு ஜயசூரியவினால் , பிரதமர் தலைமையில் ஐவரடங்கிய மீளாய்வு குழு நியமிக்கப்பட்டது. ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை மற்றும் கலாநிதி ஏ.எஸ்.எம். நவுபல் ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாவர்.

ஏனைய செய்திகள்