புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 20-09-2018 | 5:54 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 02. அம்பாறை – திருக்கோவில், காஞ்சிரங்குடா பகுதி மக்கள் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி நிலமீட்புப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். 03. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 04. நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ், அவரின் மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட நால்வருக்கு நேற்று நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது. 05. பஸ் கட்டணங்களை, இன்று (20) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், 4 வீதத்தால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். 06. காட்டுயானைகள் ரயில் மார்க்கத்தில் குறுக்கிடுவது தொடர்பில் சாரதிகளுக்கு அறிவிக்கும் சமிஞ்சை கட்டமைப்பை துரிதகதியில் அமுல்படுத்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. வட மற்றும் தென் கொரிய ஜனாதிபதிகள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர். 02. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் வௌிநாட்டு கற்கைகளில் தமிழ் மொழித்துறையும் உள்வாங்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றது. 03. மாலைதீவு அரசாங்கத்தின் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் புதிய அறிக்கையொன்றில் தகவல்கள் வௌியாகியுள்ளன. விளையாட்டுச் செய்திகள் 01. இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன்று கவலை அளிக்கிறது அல்லது வெட்கமளிக்கிறது என முன்னாள் நட்ச்சத்திர வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார். 02. ஆசியக் கிண்ண ஒரு நாள் போட்டியில், ஹொங்கொங் அணிக்கு எதிரான கடும் போட்டியின் பின்னர் 26 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற்றது.