எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய தொகை

ரயில் விபத்தில் எண்ணெய்க் கசிவு: எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய தொகை குறித்து கலந்துரையாடல்

by Staff Writer 20-09-2018 | 6:08 AM
Colombo (News 1st) பளுகஸ்வெவ பகுதியில் எரிபொருள் கொண்டுசென்ற ரயிலுடன் மோதுண்டு 4 காட்டு யானைகள் உயிரிழந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட எரிபொருள் கசிவிற்காக, எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய தொகை தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலாந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நஷ்டயீட்டை வழங்க நடவடிக்கை எடுப்பதாவும் அவர் மேலும் குறிப்பிட்டார். குறித்த விபத்தினால் 2 எண்ணை தாங்கிகள் குடைசாய்ந்தமையால் ஏற்பட்ட எண்ணைய்க் கசிவு காரணமாக எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தவேண்டிய நஷ்டயீட்டை ரயில்வே திணைக்களத்திடம் கோரவுள்ளதாக இதற்கு முன்னர் எரிபொருள் கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தது.

ஏனைய செய்திகள்