பாண் விலையை ஐந்து ரூபாவால் குறைக்கத் தீர்மானம்

பாண் விலையை ஐந்து ரூபாவால் குறைக்கத் தீர்மானம்

பாண் விலையை ஐந்து ரூபாவால் குறைக்கத் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

20 Sep, 2018 | 7:42 am

அண்மையில் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட ஒரு இறாத்தல் பாணின் விலையை மீண்டும் 5 ரூபாவால் குறைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் வணிக கைத்தொழில் அமைச்சின் உயரதிகாரிகள் ஆகியோருடனான கலந்துரையாடலின் பின்னர், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, கோதுமை மாவை முன்னைய விலைக்கு விற்பனை செய்யுமாறு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரு பிரதான நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமது எழுத்து மூல அனுமதியில்லாமல் விலையை அதிகரித்த உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்