by Staff Writer 19-09-2018 | 3:36 PM
Colombo (News 1st) பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினால் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரையை அடுத்து, பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவிற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
பிரதி பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாளைய தினம் இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.