பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை

பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்த பேச்சுவார்த்தை இன்று

by Staff Writer 19-09-2018 | 7:44 AM
Colombo (News 1st) டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் இன்று (19) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் தனியார் பஸ் சங்கங்களுக்கு இடையில் இந்தத் தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. போக்குவரத்து அமைச்சில் இன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது பயனற்ற நிலையிலுள்ள விலைச் சூத்திரத்தை மீள அமுல்படுத்துவது தெடர்பில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக தனியார் பஸ் சங்க சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய 2 மாதங்களுக்குள் டீசல் லீட்டரின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.