செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 19-09-2018 | 5:50 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 02. மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்துள்ள 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதாக கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன குறிப்பிட்டார். 03. ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்காக நேற்று (18) முதல் விசேட பணிமனை ஒன்று இயங்க ஆரம்பித்துள்ளது. 04. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. 05. கொலன்னாவையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டு 4 யானைகள் உயிரிழந்தன. வௌிநாட்டுச் செய்திகள் 01. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் சிக்கன நடவடிக்கையால் பிரதமர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த குண்டு துளைக்காத கார்கள் உள்ளிட்ட 70 ஆடம்பரக் கார்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளன. 02. வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தென் கொரிய தலைவர் மூன் ஜே இன் ஆகியோர் நேற்று (18) வட கொரிய தலைநகரில் சந்தித்தனர். விளையாட்டுச் செய்திகள் 01. இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய துடுப்பாட்ட வீரர்களே காரணம் எனக் கூறிய இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ், ரசிகர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். 02. ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை அணிக்கு, இவ்வருட ஆசிய கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.