ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 19-09-2018 | 2:01 PM
Colombo (News 1st) காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பரிந்துரைகளை ஆராய அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையில் மேலும் 10 பேர் கொண்ட அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் முன்வைக்கப்பட்ட இடைக் கால அறிக்கைக்கிணங்க பாதிப்பை ஈடுசெய்யக்கூடிய சட்டரீதியிலான பொறுப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை மற்றும் இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்பு மேற்கொள்வது தொடர்பில் தனது சிபாரிசுகளை சமர்ப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிதியுதவி வேலைத்திட்டம் கடன் நிவாரண வேலைத்திட்டம், வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம், கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டம், தொழிற்பயிற்சி, வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல் தொடர்பான சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த சிபாரிசுகளை மதிப்பீடு செய்து பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைப்பதற்காக இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்பட்டுள்ளது.  

ஏனைய செய்திகள்