நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் என்ன?

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் என்ன?

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு உண்மையான காரணம் என்ன?

எழுத்தாளர் Staff Writer

19 Sep, 2018 | 7:57 pm

Colombo (News 1st) அமெரிக்காவின் பொருளாதாரத் தீர்மானங்கள் காரணமாக டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையா, நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு உண்மையான காரணம்?

215 ஆம் ஆண்டு முதலாம் காலாண்டில் நாட்டின் ஏற்றுமதி வருமானம் 5.4 பில்லியன் டொலராகக் காணப்பட்டதுடன், இந்த வருடம் முதலாம் காலாண்டில் அது 3 பில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது.

2015 ஆண்டு முதலாம் காலாண்டில் 544 மில்லியன் டொலராகக் காணப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடு இந்த வருடம் முதல் காலாண்டில் 492 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளது.

மொத்த தேசிய உற்பத்தி வேகம் 2015 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 4.4 வீதமாகக் காணப்பட்டதுடன், இந்த வருடம் குறித்த காலப்பகுதியில் அது 3.2 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

இந்த பின்புலத்திலேயே அமெரிக்க டொலர் ஒன்றுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 167 ரூபா 41 சதமாக அமைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்