சாவகச்சேரி தனியார் வணிக நிறுவனத்தில் கொள்ளை

சாவகச்சேரி தனியார் வணிக நிறுவனத்தில் கொள்ளை

by Staff Writer 19-09-2018 | 1:55 PM
Colombo (News 1st) யாழ். சாவகச்சேரி - கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வணிக நிறுவனமொன்றில் இருந்து 18 இலட்சத்துக்கும் அதிக தொகை கொள்ளையிடப்பட்டுள்ளது. முகத்தை மூடிய நிலையில் வந்த ஒருவர் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (19) காலை 8.30 மணியளவில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெறவுள்ளது. இதன்போது 18,91,000 வரையான பணத்தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்