வட, தென் கொரிய தலைவர்கள் சந்திப்பு

வட, தென் கொரிய தலைவர்கள் சந்திப்பு

by Staff Writer 18-09-2018 | 12:40 PM
வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், தென் கொரிய தலைவர் மூன் ஜே இன் ஆகியோர் இன்று (18) வட கொரிய தலைநகரில் சந்தித்துள்ளனர். இந்த ஆண்டின் முற்பகுதி முதல், தென் கொரியா மற்றும் அமெரிக்காவோடு இதற்கு முன்னர் மேற்கொள்ளாத வகையிலான கூட்டங்களை வட கொரியா முன்னெடுத்து வருகின்றது. இந்தநிலையில், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு பியோங்யாங்கிற்கு சென்றுள்ளனர். பியோங்யாங்கை சென்றடைந்த இவர்களை வடகொரிய ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி வரவேற்றுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களும், அணு ஒழிப்புக்கான நடைமுறை செயற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. எனினும், இது தொடர்பான விபரங்கள் இதுவரை தெரியவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் தென் கொரிய ஜனாதிபதி வட கொரியாவுக்கு செல்வது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், இது இரு கொரிய தலைவர்களுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.