14 பேருடன் மாயமான ரஷ்ய விமானம்

ரஷ்யாவின் இராணுவ விமானம் 14 பேருடன் மாயம்

by Chandrasekaram Chandravadani 18-09-2018 | 10:17 AM
ரஷ்யாவின் இராணுவ விமானம் ஒன்று சிரியாவில் சென்றுகொண்டிருந்த நிலையில், காணாமல் போயுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் Il-20 ரக விமானம் மத்தியதரைக் கடல் மீது பறந்துகொண்டிருந்தபோது, பணியாளர்களடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. குறித்த விமானம் 14 பேருடன் பயணித்தமை குறிப்பிடத்தக்கது. Il-20 ரக விமானம் கிட்டத்தட்ட 35 கி.மீ. சிரிய கரையோரப் பகுதியிலிருந்து ரஷ்யாவின் மெய்மிம் விமானத் தளத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அது காணாமல் போயுள்ளது. சிரியாவில் கடந்த 7 வருட காலமாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, 2015ஆம் ஆண்டு முதல் ரஷ்யா வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த உள்நாட்டு யுத்தத்தில் சிக்கி 350,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.