மீனவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை

பருத்தித்துறையில் மீனவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை

by Staff Writer 18-09-2018 | 10:08 PM
Colombo (News 1st) யாழ். வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் மீனவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது. பருத்தித்துறை - சற்கோட்டை பகுதியில் வௌி மாவட்ட மீனவர்கள் சிலர் உள்ளூர் மீனவர்களால் இன்று தடுத்து வைக்கப்பட்டனர். இன்று அதிகாலை சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடச் சென்ற வௌி மாவட்ட மீனவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் கூறினார். வௌி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டதுடன், அவர்களின் மூன்று படகுகளும் தடுத்து வைக்கப்பட்டன. இதனையடுத்து பருத்தித்துறை, நெல்லியடி, அச்சுவேலி பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். அத்துடன், பிரதேச செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் சற்கோட்டை பகுதிக்கு சென்றிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்டடோரும் அங்கு சென்று மீனவர்களுடன் கலந்துரையாடினர். எனினும், தமது கோரிக்கைக்கு தீர்வு வழங்கப்படும் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க முடியாது என உள்ளூர் மீனவர்கள் தெரிவித்தனர். இதன்பேது, பொலிஸாருக்கும் மீனவர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை உள்ளூர் மீனவர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது பொலிஸார் அழைத்துச்சென்றனர்.  

ஏனைய செய்திகள்