அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா தீர்மானம்

குடியேறும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா தீர்மானம்

by Bella Dalima 18-09-2018 | 4:05 PM
அமெரிக்காவில் குடியேறவுள்ள அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பேயோ (Mike Pompeo) தெரிவித்துள்ளார். நடப்பாண்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை 45,000 ஆக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில், 2019 ஆம் ஆண்டு குடியேறவுள்ள அகதிகளில் எண்ணிக்கையை 30,000 ஆகக் குறைக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பேயோ தெரிவித்துள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் உள்ளீர்க்கப்படும் மிகக்குறைவான அகதிகளின் எண்ணிக்கை இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வருடாந்தம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதனிடையே, கடந்த 2017 ஆம் ஆண்டு 50,000 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டதுடன், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் 84,995 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.