இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான வரி அதிகரிப்பு

by Staff Writer 18-09-2018 | 9:31 PM
Colombo (News 1st) இறக்குமதி செய்யப்படும் சீனி மீதான வரி 18 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, ஒரு கிலோ சீனியின் விலை 90 ரூபா முதல் 110 ரூபா வரை அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் பிரசன்ன செனவிரத்ன தெரிவித்துள்ளார். நேற்றிரவு முதல் சீனி மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 32 ரூபாவாகக் காணப்பட்ட சீனி மீதான விசேட வர்த்தக பொருளுக்கான வரி சாதாரண வரி விதிப்பிற்கமைய இன்று முதல் 42 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படும் சீனியின் அளவு மிகக்குறைவாகக் காணப்படுவதாகவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.