20 தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு

by Staff Writer 17-09-2018 | 4:15 PM

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக உயர்நீதிமன்றம் இன்று (17) அறிவித்துள்ளது.

இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களை 4 நாட்களாக விசாரணை செய்ததன் பின்னரே உயர்நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை மக்கள் கருத்தறியும் வாக்குமூலம் மூலம் நிறைவேற்ற வேண்டுமென பொருட்கோடல் வழங்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மனுவொன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட 16 மனுக்களை 4 நாட்களாக உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.