ஶ்ரீலங்கனுக்கு புதிய முதலீட்டாளர்களை தேடும் அரசு

ஶ்ரீலங்கனின் நட்டத்தினால் புதிய முதலீட்டாளர்கள் தொடர்பில் அரசு கவனம்

by Staff Writer 17-09-2018 | 9:16 PM

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் மீள்சுழற்சி வேலைத்திட்டத்தின் கீழ் விமான நிறுவனத்தின் சகல கடன்களையும் திரைசேரி மயப்படுத்தி புதிய முதலீட்டாளருடன் செயற்பட அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் மீள்சுழற்சி வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த சில வருடங்களாகவே புதிய முதலீட்டாளரை கண்டுபிடிக்க அரசாங்கம் முயற்சித்தாலும் சகல சந்தர்ப்பங்களிலும் நிறுவனத்துக்கு இருந்த கடன் காரணமாக அது தோல்வியில் முடிந்தது. ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் 732 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன்பட்டுள்ளது. அதில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பெறப்பட்டுள்ளதோடு பெரும் தொகை கடன் இந்த நாட்டு அரச வங்கியிலுள்ளது. நிறுவனத்தின் நட்டம் 180 பில்லியன்களாக உள்ளது. இந்நிலையில், ஸ்ரீலங்கன் விமானசேவை மக்கள் வங்கியூடாக மேற்கொண்ட முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.