ரூபாயின் ஈர்ப்பு விசை மீண்டும் அதிகரிப்பு

''ரூபாயின்" ஈர்ப்பு விசை மீண்டும் அதிகரிப்பு

by Staff Writer 17-09-2018 | 9:26 PM

நாளுக்கு நாள் அமெரிக்க டொலருக்கு இணையாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் வாகனங்களின் விலையும் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்ட நாணயமாற்று வீதங்களுக்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 164 .37 சதமாகவும் கொள்வனவு விலை 160.94 சதமாகவும் காணப்படுகின்றது. அரசின் உத்தியோகபூர்வ தரவுகளுக்கிணங்க கடந்த ஒரு வருட காலத்தில் டொலருக்கு இணையாக 6.1 வீதத்தினால் இலங்கை ரூபாவின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.