ஞாயிற்றுக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

ஞாயிற்றுக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 17-09-2018 | 6:12 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. ரயில் ஆசன முற்பதிவு கட்டணத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 02. ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பன்றிகெய்தகுளம் பகுதியில் ரயில் ஒன்றுடன் காரொன்று மோதியதில் நால்வர் உயிரிழந்தனர். 03. தமிழர்களின் நீண்டகாலப் போராட்டத்திற்கு உங்களின் பங்களிப்பு என்னவென வட மாகாண முதலச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு, தமிழ் பேசும் மக்களுக்கும் பாரளாவிய புலம்பெயர் தமிழர்களுக்கும் இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். 04. கடந்த 3 வருடங்களுக்குள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 05. இராகலை – சென்லெனாட் மேற்பிரிவு வனப்பகுதியிலுள்ள குகைக்குள் இருந்து சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்திருந்த இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வௌிநாட்டுச் செய்தி 01. எகிப்திய முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் புதல்வர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விளையாட்டுச் செய்தி 01. ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத்தில் இலங்கை அணி தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது.