ஜே.ஆருக்கு 112 வருடங்கள்

ஜே.ஆர். ஜயவர்தனவின் 112 ஆவது ஜனன தினம் இன்று

by Staff Writer 17-09-2018 | 9:12 PM

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து உருவான அதிசிறந்த தலைவரான முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும்.

சிறிமாவோ அம்மையாரின் அரசாங்கத்தைத் தோற்கடித்து 1977 ஆம் ஆண்டு 6/5 பெரும்பான்மை சாதனை வெற்றியை கட்சி பெறுவதற்கு ஜே.ஆர். ஜவர்தன தலைமைத்துவம் வழங்கினார். சிறந்த தலைவர்களை உருவாக்கிய சிறந்த கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலம் கருதி ஜே.ஆர். ஜயவர்தன உரிய நேரத்தில் தனது கட்சித் தலைவர் பொறுப்பை தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஆர்.பிரேமதாசவுக்கு வழங்கினார். அன்று ஜயவர்தனவின் அரசாங்கத்தில் இளைஞர் விவகார அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்க 1994 ஆம் ஆண்டு கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தெரிவானார். அந்தத் தருணத்தில் கட்சித் தலைமைக்கு தகுதியுடைய சிரேஷ்டத்துவமிக்க பலர் பயங்கரவாதத்தின் கொடூரத்தால் இவ்வுலகை விட்டே பிரிந்திருந்தனர்.