சீரற்ற வானிலையால் தாமதமான இலங்கை விமானம்

சீனாவில் நிலவிய சீரற்ற வானிலையால் தாமதமான இலங்கை விமானம்

by Staff Writer 17-09-2018 | 6:35 AM
சீனாவில் நிலவிய சீரற்ற வானிலையால், தாமதமடைந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 880 விமானம் இன்று (17) அதிகாலை சீனாவின் கென்டன் நகருக்கு புறப்பட்டது. இந்தநிலையில், தற்போது விமான சேவைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்படுவதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டா​ர். குறித்த விமானம் இன்று அதிகாலை 1.44 மணிக்கு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. கொழும்பிலிருந்து சீனாவின் கென்டன் நகரை நோக்கி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படவிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 880 விமானம், சுமார் 10 மணித்தியாலங்கள் வரை தாமதமடையலாம் என கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்திருந்தது. சீனாவில் நிலவிய சூறாவளி நிலைமையை கருத்திற்கொண்டு, சீனாவின் குவன்ஸூ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது. இதனாலேயே, இலங்கையிலிருந்து புறப்படவிருந்த விமானப் பயணம் தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய செய்திகள்