இறக்குமதியாகும் துணி மீதான வரி 5 வீதமாக குறைப்பு

இறக்குமதியாகும் துணிகள் மீதான வரி 5 வீதமாகக் குறைப்பு

by Staff Writer 17-09-2018 | 5:31 PM

இறக்குமதி செய்யப்படும் துணிகள் மீது விதிக்கப்பட்டிருந்த 15 வீத வெட் வரி 5 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரிக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. புடைவை கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இறக்குமதி செய்யப்படும் புடைவை மீதான வெட் வரி குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய வெட் முறைமையின் கீழ் உள்ளடங்காத சிறிய மத்திய கைத்தொழிலாளர்களுக்கும் இதன்மூலம் தேவையான இறக்குமதி செய்யப்பட்ட புடைவைகளை கொள்வனவு செய்வதற்கு  சலுகைகள் கிடைக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.