சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 16-09-2018 | 6:59 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்காகவே இரு பிரதான கட்சிகளும் இணைந்ததாக, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 02. அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள 8 கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். 03. புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட 5,000 பயனாளிகளுக்கான சமுர்த்தி கூப்பன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (15) மாத்தளையில் வழங்கப்பட்டது. 04. பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பாதாளக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் காணப்படும் தொடர்புகள் குறித்து மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார். 05. திருகோணமலை – களப்பை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட 3.5 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தாம் அறிக்கை அனுப்பவில்லை என தமிழக மாநில ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. 02. அமெரிக்காவின் கடலோரப் பகுதியான கரோலினா நகரை ஃப்ளோரன்ஸ் புயல் தாக்கியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். விளையாட்டுச் செய்தி 01. மக்கள் சக்தி திட்டத்தின்போது வௌிக்கொணரப்பட்ட வேகப்பந்து வீச்சாளரான, 'கிளிநொச்சி எக்ஸ்பிரஸ்' என அழைக்கப்படும் விஜயராஜ், இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அதிரடித் துடுப்பாட்ட வீரர் அசேல குணரத்னவின் விக்கெட்டை இரு தடவைகள் தகர்த்துள்ளார்.