எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா - கண்டியில்

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா - கண்டியில்

by Staff Writer 16-09-2018 | 9:52 PM

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா கண்டியில் இன்று நடைபெற்றது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு ஆரம்ப விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆரின் புகைப்பட கண்காட்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்டி - பொல்கொல்ல - மஹிந்த ராஜபக்ஸ கேட்போர் கூடத்தில் இந்த கண்காட்சி நடைபெற்றது. தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இராஜாங்க கல்வி அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் எம். வேலுகுமார் உள்ளிட்ட பலர் கண்காட்சியை பார்வையிட்டனர். தென்னிந்திய பிரபலங்கள் பலரும் இதனை முன்னிட்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.