தீர்வு வழங்கவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தன

இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்கவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்தன: எம்.ஏ.சுமந்திரன்

by Bella Dalima 15-09-2018 | 7:16 PM
Colombo (News 1st) தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்காகவே இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இதுபற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு தெரிவித்தார்,
இதுவரை காலமும் இலங்கை சரித்திரத்தில் எதிரும் புதிருமாக இருந்த இரண்டு பிரதான கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு தேசிய அரசாங்கமாக ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். தேசிய அரசாங்கம் என்று அவர்கள் ஒன்று சேர்வதற்கான காரணம் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதாகும். வேறு காரணம் கிடையாது. எதிர்க்கட்சி வரிசையில் இருந்து நாங்களும் எங்களின் ஆதரவைக் கொடுத்தோம். இது எங்களது மக்களின் அபிலாஷை. இந்த தடவை இந்த முயற்சி பலனளிக்காவிட்டால் பாரிய எதிர்விளைவு ஒன்று ஏற்படும் என்பதனையும் நாங்கள் தொடர்ச்சியாக சொல்லி வந்திருக்கின்றோம்.
கரவெட்டி பிரதேச சபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற தியாகி தீலிபனின் 31 ஆவது உண்ணாவிரத ஆரம்பநாள் நினைவு தின நிகழ்வுகளின் போது எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டார்.