வவுனியா மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவு

வவுனியா மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவு

வவுனியா மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவு

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2018 | 3:32 pm

Colombo (News 1st) நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் வவுனியா மாவட்டத்தில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வவுனியாவில் 37.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

பொலன்னறுவையில் 36.6 பாகை செல்சியஸ் வெப்பநிலையும், அநுராதபுரத்தில் 35.7 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

கொழும்பிலும் அதிக வெப்பநிலை (31.3 பாகை செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பத்துடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்