வரலட்சுமிக்காக விட்டுக்கொடுத்த கமல்

வரலட்சுமிக்காக விட்டுக்கொடுத்த கமல்

வரலட்சுமிக்காக விட்டுக்கொடுத்த கமல்

எழுத்தாளர் Bella Dalima

15 Sep, 2018 | 4:34 pm

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதிக்கு இணையாக கைவசம் பல்வேறு படங்களை வைத்திருக்கும் வரலட்சுமி அடுத்ததாக நடித்து வரும் படத்திற்காக கமல் தனது படத்தலைப்பை விட்டுக்கொடுத்திருக்கிறார்.

விஜய்யின் ‘சர்கார்’, விஷாலின் ‘சண்டக்கோழி 2’, `மாரி 2′ விமலின் கன்னி ராசி, ஜெய்யின் ‘நீயா 2’, ‘வெல்வெட் நகரம்’ ஆகிய படங்கள் உட்பட பத்திற்கும் மேற்பட்ட படங்கள் தற்போது வரலட்சுமி கைவசம் உள்ளன.

கதாநாயகியாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் நடிப்பதற்கு சவாலான வேடங்களில் நடிக்கும் வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிகின்றன.

வரலட்சுமி அடுத்து ஜே.கே. இயக்கத்தில் பார்வைத் திறனற்றவராக ஒரு படத்தில் நடிக்கிறார். இதில் வரலட்சுமி தான் கதையின் நாயகி. இந்தப் படத்திற்கு முதலில் ராஜபார்வை என்று தலைப்பு வைக்க விரும்பினார்கள்.

ஆனால், கமலின் அனுமதிக்காக காத்திருந்ததால் தலைப்பு இல்லாமலேயே படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது இந்த தலைப்புக்கு கமல் சம்மதமும் அனுமதியும் அளித்துவிட்டார். படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்க உள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்