பொலிஸ் அதிகாரிகள்-பாதாளக்குழுவினர் இடையில் தொடர்பு

பொலிஸ் உயரதிகாரிகள் - பாதாளக்குழுவினர் இடையிலான தொடர்பு குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும்: மகிந்த அமரவீர வலியுறுத்தல்

by Bella Dalima 15-09-2018 | 3:50 PM

Colombo (News 1st)  

பொலிஸ் உயரதிகாரிகள் மற்றும் பாதாளக்குழு உறுப்பினர்களுக்கு இடையில் காணப்படும் தொடர்புகள் குறித்து மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அமைச்சர் மகிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார். இதற்காக பிறிதொரு குழுவொன்று நியமிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கோரியுள்ளார். நேற்று (14) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதாளக்குழு உறுப்பினர்கள் அதிகரித்து வருவதாக வௌியான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், ஒப்பீட்டளவில் கொலைகள் மற்றும் குற்றங்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.