சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு

சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்க ட்ரம்ப் உத்தரவு

by Bella Dalima 15-09-2018 | 4:53 PM
சீனப் பொருட்கள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்க அதிகாரிகளுக்கு அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன. மின்னணு பாகங்கள், ஹேன்ட் பேக் உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு சுமார் 200 பில்லியன் டொலர்கள் அளவிற்கு வரிகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 25 சதவீதம் கூடுதலாக உள்ள இந்த புதிய இறக்குமதி வரிகள் எப்போது அமலுக்கு வரும் என்று தெரியவில்லை. எந்தெந்தப் பொருட்கள் மீது வரி விதிக்கப்படும் என்ற இறுதிப்பட்டியலை அதிகாரிகள் தயாரித்து வருவதாக தகவல் வௌியாகியுள்ளது.